Advertisement

வீட்டிலேயே சூப்பராக தயாரிக்கலாம் குழம்பு மிளகாய் தூள்

By: Nagaraj Mon, 19 Sept 2022 8:31:52 PM

வீட்டிலேயே சூப்பராக தயாரிக்கலாம் குழம்பு மிளகாய் தூள்

சென்னை: குழம்பு மிளகாய் தூள் வீட்டிலேயே தயாரிக்கலாம். அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.

தேவையானவை

குண்டு மிளகாய் – 1/2 கிலோ
தனியா கொத்தமல்லி விதை – 1 கிலோ
விரலி மஞ்சள் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்

kulambu podi,gundu chilli,taniya,varli turmeric,pepper ,குழம்பு பொடி, குண்டு மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு

செய்முறை: குண்டு மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகம் அனைத்தையும் நல்ல சூரிய கதிர் படும் அளவுக்கு ஒரு நாள் முழுவதும் காயவைக்கவும்.

நன்றாக காய்ந்ததும் மாவு அரைக்கும் ஆலையில் குடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு நன்றாக மிதமான காற்றில் ஆறவைத்து பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தூள் அனைத்து வகையான குழம்புக்கும் வறுவலுக்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

Tags :
|