Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட தேங்காய் அல்வா செய்முறை

By: Nagaraj Sun, 14 Aug 2022 8:11:24 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட தேங்காய் அல்வா செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட தேங்காய் அல்வா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். இதை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். இன்னும், இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

முந்திரி - 10 (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6

raisins,cashews,almonds,coconut,sugar,ghee ,கிஸ்மிஸ் பழங்கள், முந்திரி, பாதாம், தேங்காய், சர்க்கரை, நெய்

செய்முறை: தண்ணீரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.


கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|