Advertisement

சைவ பிரியர்களுக்காக தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

By: Nagaraj Sat, 12 Sept 2020 09:00:26 AM

சைவ பிரியர்களுக்காக தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

அசைவ வகைகளில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி என பலவகையான பிரியாணிகள் இருக்கிறது. சைவ பிரியர்களுக்காக தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாசுமதி அரிசி- 1 கப்,
தேங்காய்ப் பால் - 1 கப்,
வெங்காயம் - 2,
உருளைக்கிழங்கு - 4,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய்- 1
கிராம்பு - 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
நெய்- தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு.

basmati rice,coconut milk,onions,potatoes ,பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால், வெங்காயம், உருளைக்கிழங்கு


செய்முறை: பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

அடுத்து குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து அரிசியைப் போட்டு தேங்காய்ப் பால் சேர்க்கவும்.

ஒரு விசில் வேக விட்டு இறக்கி, நறுக்கிய கொத்த மல்லி தூவி பரிமாறவும். சூப்பரான தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி.

Tags :
|