Advertisement

தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்

By: Nagaraj Mon, 04 Sept 2023 09:28:25 AM

தேங்காய் பால் ரசம் செய்முறை உங்களுக்காக!!! செய்து அசத்துங்கள்

சென்னை: தேங்காய்ப்பால் ரசம் செய்துள்ளீர்களா. செய்து பாருங்கள் ருசியில் மயங்கிவிடுவீர்கள். அப்புறம் என்ன அதன் செய்முறைதானே. இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள் மிளகு- ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம்- ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் - அரை லிட்டர் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு- ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - டீஸ்பூன் இஞ்சி- இரு டீஸ்பூன் (துருவியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது வெல்லம் - 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு

pepper,cumin,fenugreek,coconut milk,ghee,mustard,rasam ,மிளகு, சீரகம், வெந்தயம், தேங்காய்ப்பால், நெய், கடுகு, ரசம்

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்க வேண்டும். அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் இதில் கடுகு சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அந்த கலவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும்.

அது நுரை வந்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.

Tags :
|
|
|