Advertisement

அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!

By: Monisha Mon, 07 Sept 2020 3:59:48 PM

அல்சர் நோயை குணமாக்கும் தேங்காய் பால் சூப்!

இன்று நாம் தேங்காய் பால் சூப் செய்முறையை பார்க்க போகிறோம். இது அல்சர், வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்ல பலனைத்தரும்.

தேவையான பொருட்கள்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழம் - பாதி பழம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 6
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பசும்பால் - 1 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்

ulcer,coconut milk soup,onion,ginger ,அல்சர்,தேங்காய் பால் சூப்,வெங்காயம்,இஞ்சி

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும். நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும். சூப்பரான தேங்காய் பால் சூப் ரெடி.

Tags :
|
|