Advertisement

சப்புக் கொட்டி சாப்பிட தேங்காய்ப்பால் இறால் குழம்பு

By: Nagaraj Thu, 03 Nov 2022 8:33:35 PM

சப்புக் கொட்டி சாப்பிட தேங்காய்ப்பால் இறால் குழம்பு

சென்னை: உங்கள் குடும்பத்தினர் சப்புக் கொட்டி சாப்பிட தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்து கொடுங்கள். அபார ருசியுடன் இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா.

தேவையான பொருட்கள்:


இறால் – அரை கிலோ
உப்பு – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
புளிச்சாறு – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1

அரைக்க:

துருவிய தேங்காய் – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க:

பெருஞ்சீரகம் – கால் டிஸ்பூன்
கடுகு – சிறிதளவு
பட்டை – 3
கறிவேப்பிலை – சிறிது

coconut,coriander,dry chillies,prawn gravy ,தேங்காய், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், இறால் குழம்பு

செய்முறை: முதலில் பாத்திரத்தில் இறாலை எடுத்து, தோல் நிக்கியபின், தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, கொத்தமல்லிதழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி கொள்ளவும். மேலும் தேங்காயை எடுத்து நன்கு உதிரியாக துருவி எடுத்து கொள்ளவும்.


அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய தேங்காய், கொத்தமல்லி, காய்ந்த மிளகாயை எடுத்து, ஒவ்வொன்றாக போட்டுதனித்தனியாக வறுத்து எடுத்து, ஆற வைத்து கொள்ளவும். மேலும் மிக்சிஜாரில் வறுத்து ஆற வைத்த கலவைகளை போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும், அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதன் பின்பு வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும், அதனுடன் அரைத்த மசாலாகலவையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டதும், அதில் புளிக்கரைசல், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் கொதிக்க வைத்த கலவையானது நன்கு கெட்டியான பதம் வந்ததும், அதில் சுத்தம் செய்த இறால் துண்டுகளை போட்டு சில நிமிடம் நன்கு கொதிக்க வைத்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவியபின், இறக்கி பரிமாறினால், ருசியான தேங்காய்ப்பால் இறால் குழம்பு தயார்.

Tags :