Advertisement

உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான பருப்புக் கீரை மசியல் செய்முறை

By: Nagaraj Thu, 13 July 2023 11:12:38 AM

உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான பருப்புக் கீரை மசியல் செய்முறை

சென்னை: பருப்பு கீரை கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டினை குறைக்கிறது. அது மட்டுமல்லாது கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும். இதில் அருமையான பருப்புக்கீரை மசியல் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கீரை - 1 கட்டுபாசிப் பருப்பு - அரை டம்ளர்( சிறிய டம்ளர்)சின்ன வெங்காயம் - 15பூண்டு - 1வரமிளகாய் - 4கடுகு – தேவையான அளவுசீரகம் - தேவையான அளவுகருவேப்பிலை - தேவையான அளவுதக்காளி - 1சாம்பார் தூள் - 1கடலை எண்ணை - 3 Spoonமஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்

nutrient,taste,dal mucilaginous,healthy,salty ,சத்தானது, சுவை, பருப்புகீரை மசியல், ஆரோக்கியம், உப்பு

செய்முறை: ஒரு குக்கரில் பாசிப் பருப்பு மற்றும் கழுவி அறுத்து வைத்த கீரை, மஞ்சள் தூள் சிறிதளவு விளக்கு எண்ணை, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும்.

ஒரு சட்டியில் எண்ணை ஊற்றிக் கடுகு, சீரகம், வரமிளகாய் போட்டு நன்றாகத் தாளிக்காவும். சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வணக்கவும். தக்காளி, சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மசியும் வரை கிளரவும்.

அது வதங்கியதும் குக்கரில் வேகவைத்த பருப்பு மற்றும் கீரையை அந்த சட்டியில் எடுத்துப் போட்டு மத்து வைத்துக் கடையவும். கடைந்ததைத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வைத்து இறக்கவும். சத்தான சுவையான பருப்பு மசியல் தயார்.

Tags :
|