Advertisement

ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கொத்தமல்லி சூப்

By: Nagaraj Fri, 20 Jan 2023 11:41:59 PM

ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கொத்தமல்லி சூப்

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் கொத்தமல்லி சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

சீரகம் – கால் கப்
தனியா – கால் கப்
மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தண்ணீர் -2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு

cumin,taniya,pepper,curry leaves,lemon juice ,சீரகம், தனியா, மிளகு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு

செய்முறை : இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். சீரகம், தனியா, மிளகு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.

இந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீர் கலவையுடன் உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். ஆரோக்கியத்தை உயர்த்தும்.

Tags :
|
|
|