Advertisement

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்முறை

By: Nagaraj Sat, 11 Nov 2023 09:17:39 AM

நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் செய்முறை

சென்னை: சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வறுவல் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்நாட்டுக்கோழி - ஒரு கிலோபெரியவெங்காயம் - 3இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 5மிளகுதூள் - 4 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவு

country chicken,sausage,pepper roast,taste,health ,நாட்டுக்கோழி, கொத்துக்கறி, மிளகு வறுவல், சுவை, ஆரோக்கியம்

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும்.

நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும். விசில் போனவுடன் சிக்கனை எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சூப் போல குடிக்கலாம் சளி நீங்கும். வெந்த சிக்கனை சின்ன சின்ன பீஸாக பிய்ந்து தட்டில் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். இதனுடன் சிக்கனைப் போட்டு நன்றாக கிளறி நன்றாக ப்ரை ஆகும் வரை வதக்கவும். பின்னர் சீரகத்தூள், பெப்பர் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். சுவையான நாட்டுக்கோழி கொத்துக்கறி மிளகு வருவல் தயார்.

Tags :
|