Advertisement

மொறுமொறுப்பான நேந்திர சிப்ஸ் செய்வது எப்படி?

By: Monisha Thu, 05 Nov 2020 1:20:24 PM

மொறுமொறுப்பான நேந்திர சிப்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் நொறுக்கு தீனி வகையில் ஒன்று நேந்திர சிப்ஸ். இந்த நேந்திர சிப்ஸ் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நேந்திரங்காய் – 2
உப்பு -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 250மில்லி

chips,banana,coconut oil,crispy,crunchy food ,சிப்ஸ்,வாழைக்காய்,தேங்காய் எண்ணெய்,கிரிஸ்பி,நொறுக்கு தீனி

செய்முறை
முதலாவது வாழைக்காயை தோல் சீவி அதனை மெலிதாக வட்ட வடிவில் நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்னர் ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் நறுக்கிய நேந்திரங்காய் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

பின்பு அதனை வெளியே எடுத்து, நன்கு உலர வைக்க வேண்டும். தண்ணீர் முற்றிலும் காய்ந்த பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்யை ஊற்றி நன்கு சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் உலர வைத்த துண்டுகளைப் போட்டு, நன்கு பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் மொறுமொறுப்பான நேந்திர சிப்ஸ் ரெடி.

Tags :
|
|
|