Advertisement

மொறு, மொறுப்பாக சர்க்கரைவள்ளி கிழக்கு தோசை செய்முறை

By: Nagaraj Thu, 30 June 2022 8:42:58 PM

மொறு, மொறுப்பாக சர்க்கரைவள்ளி கிழக்கு தோசை செய்முறை

சென்னை: எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கினை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

சத்து மிகுந்த சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்
தோசை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1

sugar beet,beet,dosa,carrot,onion,salt ,சர்க்கரை வள்ளி, கிழங்கு, தோசை, கேரட், வெங்காயம், உப்பு

செய்முறை: கேரட்டை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை ரெடி.

Tags :
|
|
|
|