Advertisement

மொறு, மொறுப்பான சுவையில் அடை செய்யும் முறை

By: Nagaraj Tue, 14 July 2020 5:59:48 PM

மொறு, மொறுப்பான சுவையில் அடை செய்யும் முறை

மொறு, மொறு சுவையில் அடை... ஹோட்டல்களில் செய்யப்படும் அடை தோசைகளில் இரண்டு பங்கு அரிசி மற்றும் ஒரு பங்கு பருப்பு சேர்ப்பார்கள். ஆனால் இதனை நாம் வீட்டில் செய்யும் பொழுது சம அளவு அரிசி மற்றும் பருப்பை எடுத்துக் கொள்வதால் பருப்பினுடைய புரதச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கிறது. மொறு, மொறு சுவையில் அடை செய்முறை குறித்து உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி- 1/2 கப்

துவரம் பருப்பு- 1/2 கப்

உளுத்தம் பருப்பு- 1/2 கப்

கடலை பருப்பு- 1/2 கப்

சின்ன வெங்காயம்- 15

காய்ந்த மிளகாய்- 8

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

கறிவேப்பிலை- ஒரு கொத்து

உப்பு- தேவையான அளவு

cinnamon,cilantro,flavor,ghee,small onion,lentils ,மொறு, மொறு அடை, சுவை, நெய், சின்ன வெங்காயம், பெருங்காயம்

செய்முறை:

இந்த அடை தோசை செய்வதற்கு முதலில் 1/2 கப் பச்சை அரிசி, 1/2 கப் துவரம் பருப்பு, 1/2 கப் உளுத்தம்பருப்பு, 1/2 கப் கடலைப் பருப்பை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு ஊற வைத்து கொள்ளுங்கள். இதனோடு 6 காய்ந்த மிளகாயையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை அரிசிக்கு பதிலாக இட்லி அரிசியை கூட பயன்படுத்தலாம்.

இந்த பொருட்கள் இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளலாம். இட்லி மாவு அரைப்பது போல மைய அரைக்காமல் நர நரவென்று அரைத்தால் போதுமானது. அரைத்த பின் தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் ஊற்றவும். அடை மாவு கெட்டியாக தான் இருக்க வேண்டும்.

அடுத்ததாக வாணல் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி இரண்டு காய்ந்த மிளகாயை போடவும். 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி பெருங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு தாளித்து நாம் அரைத்து வைத்த மாவோடு கொட்டவும். பிறகு பொடியாக நறுக்கிய 15 சின்ன வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இப்போது தோசைக் கல்லை வைத்து அது காய்ந்த பின் மாவை ஊற்றி விரிக்கவும். தோசையை சுற்றி நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் ஊற்றினால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். நெய் பிடிக்காதவர்கள் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி போட்டு மறு பக்கமும் வேக வைக்கவும். சுலபமாக தயாராகி விட்டது மொறு மொறு அடை தோசை .

Tags :
|
|