Advertisement

கிரிஸ்பி கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?

By: Monisha Thu, 20 Aug 2020 4:15:35 PM

கிரிஸ்பி கேழ்வரகு லட்டு செய்வது எப்படி?

எக்கச்சக்க விலையில் கிடைக்கும் இம்போர்டட் சாக்லேட்டின் சுவையையும் மிஞ்சும் கிரிஸ்பி கேழ்வரகு லட்டு எப்படி சுலபமாக செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப் (துருவியது)
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - தேக்கரண்டி
திராட்சை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
சுக்கு தூள் - 1 சிட்டிகை

செய்முறை
வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது) எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும். கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

Tags :
|
|
|