Advertisement

அசத்தல் சுவையில் தித்திப்பான ரவை கேரட் லட்டு

By: Nagaraj Tue, 08 Sept 2020 09:04:16 AM

அசத்தல் சுவையில் தித்திப்பான ரவை கேரட் லட்டு

குழந்தைகளுக்கு வழக்கமான ஸ்வீட் செய்து கொடுத்து அலுத்துவிட்டதா? ரொம்பவும் வித்தியாசமான ரவை கேரட் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

ரவை- 200 கிராம்
கேரட்- 200கிராம்
சர்க்கரை- 150 கிராம்
முந்திரி - 10
பால் பவுடர் - 50 கிராம்
நெய் - 50 கிராம்
ஏலக்காய் பொடி - அரைஸ்பூன்

semolina carrot laddu,munditi,cardamom,powder,ghee ,ரவை கேரட் லட்டு, முந்திதி, ஏலக்காய், பால்பவுடர், நெய்

செய்முறை: கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரி மற்றும் ரவையை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி கேரட்டை வதக்கி குறைவான தீயில் வேக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

கொதி வந்தபின்னர், வறுத்த ரவை முந்திரி சேர்த்து கிளறிவிடவும்.
வேகவைத்த கேரட்டை இதில் சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும். அடுத்து பால் பவுடரையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கிளறி, இறக்கி ஆறவிடவும். லட்டு கலவையை நெய் தடவி உருட்டி சிறிது பால் பவுடர் தூவி ஒரு முந்திரியை வைத்து டிசைன் செய்யவும். டேஸ்ட்டியான ரவை கேரட் லட்டு தயார்.

Tags :
|