Advertisement

ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த மணத்தக்காளி காய் குழம்பு செய்முறை

By: Nagaraj Thu, 14 May 2020 11:07:21 AM

ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த மணத்தக்காளி காய் குழம்பு செய்முறை

உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் மணத்தக்காளி கீரை எப்போதும் முன்னணி வகிக்கும். அந்த மணத்தக்காளி காய் வைத்து குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை

பச்சை மணத்தக்காளிக்காய், நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், பூண்டு - 4 பல், தக்காளி - 1, புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,


grind,gourd,flavoring,oil,onion ,மணத்தக்காளி காய், குழம்பு, ருசி, எண்ணெய், உளுத்தம்பருப்பு

செய்முறை

மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும். மணத்தக்காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். ருசி மனதை அள்ளும்.

Tags :
|
|
|