Advertisement

ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த அன்னாசிப் பழ தயிர் பச்சடி

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:42:30 PM

ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த அன்னாசிப் பழ தயிர் பச்சடி

சென்னை: அன்னாசிப் பழம் தயிர் பச்சடி செய்து பாருங்கள். உடலுக்கும் மிக நல்லது. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை
அன்னாசிப் பழம் – 1 கப்தயிர் – 3/4 கப்பச்சை மிளகாய் – 2தேங்காய் துருவல் – 1/2 கப்உப்பு -தேவையான அளவுகடுகு- 2 ஸ்பூன்எண்ணெய் -2 ஸ்பூன்கறிவேப்பிலை – தேவையான அளவுவெந்தயம் – 1/2 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்

pineapple fruit,green chillies,cumin seeds,grated coconut,salt ,அன்னாசி பழம், பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவல், உப்பு

செய்முறை: அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு கடுகு,வெந்தயம்,சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பிறகு நறுக்கிய அன்னாசி பழம்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கடைசியில் தயிர் சேர்த்து இறக்கி விட வேண்டும். இதனை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலே சுவை அள்ளும்.

Tags :