Advertisement

சுவையான ஆந்திரா பருப்பு பொடி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 27 Aug 2022 4:36:07 PM

சுவையான ஆந்திரா பருப்பு பொடி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ஆந்திராவில் மிகப் பிரபலமானது பருப்பு பொடி சாதம். சூடான சாதத்துடன் பருப்பு பொடியும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால், நாக்கில் சுவை நடனமாடும். ஆந்திர மக்கள் அதிகம் சாப்பிடும் உணவு வகைகளில், இது முதலாவதாக உள்ளது.


தேவையான பொருட்கள்:


துவரம் பருப்பு- 100 கிராம்
பாசிப்பருப்பு- 100 கிராம்
உடைத்த கடலை (பொட்டுக்கடலை)- 100 கிராம்
பூண்டு- 100 கிராம்
சீரகம்- 2 மேசைக்கரண்டி
குண்டு மிளகாய்- 15-20
பெருங்காயம்- 30 கிராம்
கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
வெல்லம்- 20 கிராம்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

lentils,chickpeas,split peas,garlic,cumin,red chillies ,பருப்பு, பாசிப்பருப்பு, உடைத்த கடலை, பூண்டு, சீரகம், குண்டு மிளகாய்

செய்முறை: சூடான ஒரு கடாயில், முதலில் துவரம் பருப்பை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். பின்பு, பாசிப்பருப்பு மற்றும் உடைத்த கடலை இரண்டையும் தனித் தனியாக வறுத்து எடுக்க வேண்டும். (வறுத்தெடுக்கும் பொருட்களை குறைந்த அல்லது மிதமான தீயில் வறுத்து எடுத்தால் மட்டுமே பொன்னிறமாக வரும். அதிக தீயில் வைத்தோ அல்லது கடாயை அதிக சூட்டில் வறுத்தெடுத்தாலோ கருகி விடும்.)

அடுத்து, தோலுரித்த பச்சை பூண்டை 100 கிராம் எடுத்து அதையும் கடாயில் வறுத்தெடுக்க வேண்டும். பூண்டு, நன்றாக வறுபட்டவுடன் முறையே எடுத்து வைக்க வேண்டும். பிறகு, சீரகத்தை வறுத்தெடுக்க வேண்டும். இதற்கு அதிக சூடு தேவைப்படாது. அதனால், கவனித்து வறுத்தெடுப்பது நல்லது. குண்டு மிளகாய் காரத்திற்கு ஏற்ப எடுத்துக்கொண்டு, அதை கருகாமல் வறுத்ததெடுக்க வேண்டும். பின்னர் கருவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதை மொறுவலாக வறுக்க வேண்டும். கையால் அழுத்தினால், தூள் தூளாக வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.

கட்டியான பால் பெருங்காயமாக இருந்தால் அதனை, 30 கிராம் அளவு எடுத்து கடாயில் ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் முறையே தனித் தனியாக வறுத்தெடுத்த பின்பு, அதில் தேவையான அளவு கல் உப்பும் சிறிது வெல்லமும் சேர்த்து மைய அரைத்தெடுத்தால் ஆந்திர மக்கள் சாப்பிடும் பருப்பு பொடி தயார். சூடாக சாதம் வடித்தவுடன், அதனுடன் பருப்பு பொடியை தூவி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவைக் கூடும்.

Tags :
|
|