Advertisement

சுவையான ஆவக்காய் சிக்கன் பிரியாணி செய்முறை

By: Nagaraj Fri, 04 Sept 2020 4:20:28 PM

சுவையான ஆவக்காய் சிக்கன் பிரியாணி செய்முறை

வித்தியாசமான ஆரோக்கியமான ரெசிபி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதனை வீட்டில் செய்து பாருங்கள், இப்போது சுவையான ஆவக்காய் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

சிக்கன்- 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 500 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 2
இலவங்கப்பட்டை- 2,
கிராம்பு- 2 ,
ஏலக்காய்-2,
சாதிக்காய்-2,
அன்னாசி பூ - 2
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
ஆவக்காய் ஊறுகாய் - 3 ஸ்பூன்
புதினா இலைகள்

avocado chicken,basmati rice,ghee,biryani ,ஆவக்காய் சிக்கன், பாசுமதி அரிசி, நெய், பிரியாணி

செய்முறை: குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, ஜாதிபத்திரி, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து நன்கு வதக்கவும்

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்துள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் மற்றும் ஆவக்காய் ஊறுகாய் சேர்த்து லேசாக வேக விடவும்.

புதினா இலை, கொத்தமல்லி இலை, அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர், பாசுமதி அரிசி, நெய் சேர்த்து குக்கரை விசில் விட்டு இறக்கினால் சுவையான ஆவக்காய் சிக்கன் பிரியாணி ரெடி.

Tags :
|