Advertisement

அருமையான ருசியில் செட்டிநாடு மிளகாய் சட்னி செய்முறை

By: Nagaraj Sun, 10 July 2022 9:56:45 PM

அருமையான ருசியில் செட்டிநாடு மிளகாய் சட்னி செய்முறை

சென்னை: அருமையான ருசியில் செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை

sema rusi,chettinad,chili chutney,mustard,curry leaves ,
செம ருசி, செட்டிநாடு, மிளகாய் சட்னி, கடுகு, கறிவேப்பிலை

செய்முறை: தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார். இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

Tags :