Advertisement

அருமையான சுவையில் தேங்காய் பால் மீன் குழம்பு செய்முறை

By: Nagaraj Fri, 23 June 2023 6:10:00 PM

அருமையான சுவையில் தேங்காய் பால் மீன் குழம்பு செய்முறை

சென்னை: சூப்பர் சுவையில் கலக்கலான தேங்காய் பால் மீன் குழம்பு செய்து பாருங்கள். இதோ செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள் வஞ்சரம் மீன் - அரை கிலோ தேங்காய் பால் - 2 கப் வெங்காயம் - 1 தக்காளி - 2 பூண்டு - 1 இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கல் உப்பு - 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

coconut milk,fish,coriander powder,cumin powder,chillies,tomatoes ,தேங்காய்பால், மீன், மல்லித்தூள், சீரக தூள், மிளகாய், தக்காளி

செய்முறை: மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.

மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்

Tags :
|