Advertisement

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:35:41 AM

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

சிக்கனில் பல வகை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் ரொம்பவும் சுவையான நாவில் எச்சில் வரவைக்கும் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ,
மிளகாய் தூள் - 2 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
மிளகு தூள் - 1 ஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
காய்ந்த மிளகாய் - 4,
எலுமிச்சை - 1/2 மூடி,
கேசரி பவுடர் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொத்தளவு,
உப்பு – தேவையான அளவு.

chicken,spice powder,green chilli,dried chilli paste ,சிக்கன், மசாலா தூள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது

செய்முறை: காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.

அடுத்து சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சிக்கனைப் போட்டு பொரித்தால் கிரிஸ்பி மிளகாய் சிக்கன் ரெடி. அருமையான சுவையில் இருக்கும் இது உங்கள் குடும்பத்தாரின் பாராட்டுக்களை உங்களுக்கு பெற்றுத்தரும்.

Tags :