Advertisement

சுவையான முறையில் முட்டை சீஸ் ஆம்லேட் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 07 July 2022 7:48:04 PM

சுவையான முறையில் முட்டை சீஸ் ஆம்லேட் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சீஸ் புரதச்சத்து நிறைந்ததாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது மற்றும் பசியை குறைக்கிறது. இதனால் எடை இழப்பு ஏற்பட இது உதவுகிறது. இதை தவிர பாலாடைக்கட்டி புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

உண்மையில் சீஸ் மிகவும் சுவையாக இருக்காது என்றாலும் அது பலருக்கு பிடிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. அந்த சீஸ் கொண்டு சுவையான முட்டை ஆம்லெட் செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருள்கள் :

முட்டை - 3
துருவிய சீஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
குடமிளகாய் - 2 மேஜைக் கரண்டி
தக்காளி - 2 மேஜைக் கரண்டி
பெரிய வெங்காயம் - 2 மேஜைக் கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

egg,cheese,chili,pepper,salt,bread ,முட்டை, சீஸ், குடைமிளகாய், மிளகுதூள், உப்பு, பிரெட்

செய்முறை : மூன்று முட்டைகளையும் உடைத்து ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு நுரை வரும்படி கலக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குடமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பாதி வதங்கியதும் அதன் மேல் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். இந்த ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்க போவதில்லை. அதனால் மூடி போட்டு வேக விடவும். நடுவில் வேகாமல் இருந்தால் கடாயை எடுத்து ஒரு சுற்று சுற்றவும்.


இப்படி செய்வதால் நடுவில் வேகாமல் இருக்கும் முட்டை கடாயில் ஓரமாக வந்து சீக்கிரமாக வெந்து விடும். கடைசியாக சீஸை முட்டையில் மேல் பரவலாக சுற்றி போடவும். ஒரு நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் அடுப்பை அணைக்கவும். பிறகு பாதியாக மடித்து எடுத்து தட்டில் வைக்கவும். இப்போது அருமையான முட்டை சீஸ் ஆம்லெட் ரெடி. சுவையான முட்டை சீஸ் ஆம்லெட் ரெடி. கட் செய்து பரிமாறவும். பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Tags :
|
|
|
|
|