Advertisement

இட்லி மாவில் சுவை மிகுந்த போண்டா செய்முறை

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:28:06 AM

இட்லி மாவில் சுவை மிகுந்த போண்டா செய்முறை

சென்னை: தின்பண்டங்கள் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. இட்லி மாவில் கார்போஹைட்ரேட், புரதம் உள்ளதால் அதில் செய்யப்படும் தின்பண்டங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது இந்த இட்லி மாவினால் செய்யப்படும் தின்பண்டங்கள்.வீட்டிலே செய்வதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது. இட்லி மாவில் போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 கப்
அரிசி மாவு - ½ கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கருவேப்பிலை, கொத்தமல்லி
சீரகம் - ½ ஸ்பூன்
மிளகு - ¼ ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

italian flour,bhonda,coriander,onion,green chillies,cumin ,இட்லி மாவு, போண்டா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம்

செய்முறை: ஒரு கப் புளிக்காத இட்லி மாவு, ½ கப்அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, கொத்தமல்லி, ½ ஸ்பூன் சீரகம், ¼ ஸ்பூன் மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் சூடான பிறகு அதில் இந்த மாவை சிறிதுசிறிதாக போட்டு பொன்னிறமாக வரும் போது பொரித்து எடுத்தால் சுவையான இட்லி மாவு போண்டா ரெடி.

Tags :
|
|