Advertisement

எளிதான முறையில் சுவையாக பூண்டு காரக்குழும்பு செய்முறை

By: Nagaraj Fri, 23 Dec 2022 09:15:00 AM

எளிதான முறையில் சுவையாக பூண்டு காரக்குழும்பு செய்முறை

சென்னை: எளிதான முறையில் பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ருசியும் பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்கருவேப்பிலை - 10 உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராமபெரியவெங்காயம் - 2தக்காளி - 3 மிளகாய் தூள் - 2டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்புளி - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது

tomato,garlic,chili powder,coriander powder,salt ,தக்காளி, பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள் ,உப்பு

தாளிக்கும் முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் ,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான பூண்டு காரக்குழம்பு ரெடி

Tags :
|
|