Advertisement

அருமையான ருசியில் இஞ்சி,பூண்டு தொக்கு செய்முறை

By: Nagaraj Tue, 21 Feb 2023 10:29:07 PM

அருமையான ருசியில் இஞ்சி,பூண்டு தொக்கு செய்முறை

சென்னை: இஞ்சி,பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். வாங்க. இது அருமையான ருசியில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள்
இஞ்சி -50கிராம்.பூண்டு - 100 கிராம்கல் உப்பு – தேவையான அளவு.வெல்லம் – சிறிதளவு.புளி – எலுமிச்சை அளவு. கதகதப்பான நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.வற்றல்தூள்– 1ஸ்பூன்.மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்.கடுகு - 1 ஸ்பூன்நல்லெண்ணய்- தேவையான அளவு

வறுத்து பொடிக்க :
வெந்தயம், கடுகு, சீரகம் – தலா 1/2 ஸ்பூன்

oil,mustard,cumin powder,ginger,garlic ,எண்ணெய், கடுகு, சீரகப்பொடி, தொக்கு, இஞ்சி, பூண்டு

செய்முறை: வெந்தயம், கடுகு, சீரகம் ஆகிய மூன்றையும் தனித்தனியே எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சியை சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்.பூண்டு உரித்து கொள்ளவும். இஞ்சி,பூண்டை வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி ஆற வைக்கவும். பின்இஞ்சி, பூண்டு, வெல்லம் ஆகியவற்றுடன் புளிச்சாறு கலந்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

5.வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தபிறகு, மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி ,பூண்டு விழுதினைச் சேர்க்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும். நடுநடுவே கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.சிறுதீயில் வைத்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் வெந்தயம், கடுகு, சீரகப் பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.

சூடான சாதத்தில் நல்லெண்ணையுடன் இந்த தொக்கு சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். தயிர்சாதம், பழைய சாதத்திற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்.

Tags :
|
|