Advertisement

அருமையான ருசியில் பெப்பர் சிக்கன் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 18 Dec 2022 11:08:39 PM

அருமையான ருசியில் பெப்பர் சிக்கன் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ஈசியாக பெப்பர் சிக்கன் செய்யலாமா. குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள் -
எலும்பில்லா சிக்கன் - 300 கிராம்பெரிய வெங்காயம் - 1/2மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டிசீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டிமிளகுத் தூள் - 2 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு
தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டிகடுகு - 1/2 மேஜைக்கரண்டிகறிவேப்பில்லை - சிறிது

chapati,biryani,chicken,cumin,coriander,peppers ,சப்பாத்தி, பிரியாணி, சிக்கன், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள்

செய்முறை: சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவி மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறிக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் மல்லித் தூள், சீரகத் தூள், 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும். சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி வைக்கவும். தீயை குறைத்து வைத்து 15 நிமிடம் அல்லது சிக்கன் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

நடுவே கிளறி விடவும். சிக்கன் தண்ணீர் விடுவதால் தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை. சிக்கன் நன்றாக வெந்ததும் மீதமுள்ள மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.இதை பிரியாணி, ப்ரைட் ரைஸ் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Tags :
|