Advertisement

அருமையான ருசியில் ராமேஸ்வரம் சட்னி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 17 Nov 2022 10:34:41 PM

அருமையான ருசியில் ராமேஸ்வரம் சட்னி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ராமேஸ்வரம் சட்னி செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். இதன் செய்முறை உங்களுக்காக.
தேவையானவை
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டிகடலைப் பருப்பு - 2 தேக்கரண்டிவரமிளகாய் - 4புளி - ஒரு நெல்லிக்காய் அளவுதேங்காய் - ஒரு மூடிபெருங்காயம் - கால் தேக்கரண்டிகடுகு - ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

ulutam dal,chickpeas,chillies,rameswaram chutney,relish ,உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், ராமேஸ்வரம் சட்னி, ருசி

செய்முறை: வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். பருப்பு வகைகள் சிவந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.

அரைத்த சட்னியை தாளித்தவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கவும், கெட்டியானதும் இறக்கவும். இந்த சட்னி இட்லி, தோசையுடனும், கலந்த சாத வகைகளுடனும் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

Tags :