Advertisement

அருமையான சுவையில் சேமியா இட்லி செய்முறை

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:01:58 PM

அருமையான சுவையில் சேமியா இட்லி செய்முறை

சென்னை: சேமியா இட்லி செய்து பார்த்துள்ளீர்களா. செய்து பாருங்கள் வித்தியாசமான சுவையில் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 250 கிராம்அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்தயிர் - 300 மில்லிபொடியாக நறுக்கியசாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடிதுருவிய கேரட் - 1துருவிய இஞ்சி - 1 துண்டுபொடியாக நறுக்கியபச்சை மிளகாய் – 2கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடிகருவேப்பிலை - ஒரு ஆர்க்குநெய் - ஒரு குழி கரண்டிகடலெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்கடுகு - ஒரு டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்சீரகம் - அரை டீஸ்பூன்கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2முந்திரிப் பருப்பு - 15பெருங்காயம் - சிட்டிகைமஞ்சள் பொடி - சிட்டிகைதேவையான அளவு உப்பு

semiya,rice flour,curd,coconut chutney,cashews ,சேமியா, அரிசி மாவு, தயிர், தேங்காய் சட்னி, முந்திரி

செய்முறை: கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை இவற்றைஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்துக் கொள்ளவும் .

வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், மல்லித்தழை இவற்றையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க சுவையான சேமியா இட்லி தயார். சுவையான சேமியா இட்லி தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்.

Tags :
|
|