Advertisement

புளிச்சக்கீரையில் அருமையான ருசியில் சட்னி செய்முறை

By: Nagaraj Wed, 13 July 2022 10:14:55 PM

புளிச்சக்கீரையில் அருமையான ருசியில் சட்னி செய்முறை

சென்னை: புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தோசை, இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை (கோங்குரா) - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 6, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறுதுண்டு, மஞ்சள் தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

tamarind,salt,rice,spinach,iron,turmeric powder ,புளிச்சக்கீரை, காரம், சாதம், கீரை, இரும்புச்சத்து, மஞ்சள் தூள்

செய்முறை:வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும். இரண்டு குழிக் கரண்டி எண்ணெயை அதில் விட்டு, பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். அதேபோல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாயை வதக்கி எடுக்கவும். கீரையை நரம்பில்லாமல் ஆய்ந்து நன்றாகக் கழுவி நீரை வடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையைப் போட்டு சுருள வதக்கவும்.

கீரையைத் தவிர, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துப் பொடிக்கவும். கீரையையும் போட்டு நன்றாக மசிய அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, விழுதைப் போட்டு சுருளக் கிளறி இறக்கவும்.
புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கர்ப்பிணிகள் அடிக்கடி சாப்பிட்டால் குமட்டல் இருக்காது. இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் காட்டிலும் இந்தக் கீரை இயற்கையான இரும்புச் சத்தை உடலுக்கு அளிக்கிறது. நாவில் உள்ள சுவை நரம்புகளைத் தூண்டும். இந்தச் சட்னி செய்யும்போது, காரத்தைக் குறைவாக சேர்ப்பது நல்லது.

Tags :
|
|
|