Advertisement

ஜீரண சக்தியை அளிக்கும் இஞ்சி பச்சடி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 09 Nov 2023 12:17:47 PM

ஜீரண சக்தியை அளிக்கும் இஞ்சி பச்சடி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தரும் இஞ்சி பச்சடி செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்.
இஞ்சி -200 gramதயிர் - 200 கிராம்தேங்காய் துருவல் - 1 மூடிதேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்மிளகாய் தூள் - அரை ஸ்பூன்உப்பு , கருவேப்பிலை - தேவையான அளவு.

ginger,chilli powder,salt,coconut,acacia ,இஞ்சி, மிளகாய் தூள், உப்பு, தேங்காய், பெருங்காயம்

செய்முறை: இஞ்சியை தோலை நீக்கி பொடியாக நறுக்கி 1 மூடி தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த பேஸ்ட் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கடாயை இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியவுடன் தயிர் சேர்த்து நன்கு கிளறினால் ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி பச்சடி ரெடி. ஆரோக்கியமும் நிறைந்தது.

Tags :
|
|