Advertisement

உடலை குளிர்ச்சியடைய செய்யும் வெந்தயக்களி செய்முறை

By: Nagaraj Fri, 27 Oct 2023 07:10:20 AM

உடலை குளிர்ச்சியடைய செய்யும் வெந்தயக்களி செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வெந்தய களி செய்வோம் வாங்க. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை காலை உணவாக பூப்பெய்தும் பெண்களுக்கு கொடுப்பார்கள். வெயில் காலங்களில் உடம்பு குளிர்ச்சியடையவும் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
வெந்தயம் – 100 கிராம்புழுங்கலரிசி – 400 கிராம்வெள்ளை முழு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்குபனைவெல்லம் – 200 கிராம்நல்லெண்ணெய் – 100 மிலிஏலக்காய்தூள் – 1/2 டீஸ்பூன்சுக்குபொடி – 1/4 டீஸ்பூன்

fenugreek,palm jaggery,ghee,cardamom powder,sugar powder ,வெந்தயம், பனை வெல்லம், நல்லெண்ணெய், ஏலக்காய் தூள், சுக்குப்பொடி

செய்முறை: அரிசி + உளுந்து இவற்றை ஒன்றாகவும், வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும், அரிசி உளுந்தினை மைய அரைக்கவும்.

பனைவெல்லத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள் + சுக்கு பொடி சேர்த்து இறக்கவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும்.

கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும், ஒட்டும் போது நல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும். இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும். மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும். கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும்.

Tags :
|