Advertisement

இன்ஸ்ட்ன்ட் இட்லி மாவு எப்படி செய்யலாம் என்று தெரியுங்களா!!!

By: Nagaraj Sun, 01 Oct 2023 1:19:57 PM

இன்ஸ்ட்ன்ட் இட்லி மாவு எப்படி செய்யலாம் என்று தெரியுங்களா!!!

சென்னை: இட்லி மாவு அரைக்காமலே சூப்பரான இன்ஸ்டன்ட் இட்லியை இப்படி செய்து பாருங்க. ஆரோக்கியமாகவும் இருக்கும்.


தேவையான பொருள்கள்
200 கிராம் உளுத்தம் பருப்புவெந்தயம்100 கிராம் அவல்சாப்பாடு அரிசி3/4 கப் தயிர்பேக்கிங் சோடா

delicious idli,curd,rice,flour,aval ,சுவையான இட்லி, தயிர், சாப்பாட்டு அரிசி, மாவு, அவல்

செய்முறை: கடாய் சூடானதும் 200 கிராம் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். சிறிது நேரத்தில், அத்துடன் குறைந்த அளவில் வெந்தயம் சேர்த்திட வேண்டும். அடுத்ததாக, 100 கிராம் அவல் சேர்த்து வதக்க வேண்டும். அதனை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்.

இதற்கிடையில், சாப்பாடு அரிசியையும் மிக்ஸியில் தனியாகப் போட்டு கொஞ்சம் நைசாக அரைத்து கொண்டு வேண்டும். அரைத்த அரிசியுடன், நைசாக அரைத்த உளுத்தம் பருப்பை சேர்க்க வேண்டும். அவ்வளவு தான், இட்லி மாவு தயார்.

இட்லி மாவுடன் 3/4 கப் தயிர் சேர்க்க வேண்டும் (குறிப்பு: மாவு அரைத்ததும் உடனே செய்தால் மட்டுமே தயிர் சேர்க்க வேண்டும்). அத்துடன் லைட்டாக பேக்கிங் சோடாவும், உப்பும் கலக்க வேண்டும்.

அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். சுமார் 15 நிமிடம் ஊற வைத்தால் இட்லி மாவு கெட்டியாக மாறிவிடும். அவ்வளவு தான், தயார் செய்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்தால் போதும், சுவையான இட்லி ரெடி.

Tags :
|
|
|