Advertisement

உழுவா கஞ்சி செய்வது எப்படின்னு தெரியுங்களா!

By: Nagaraj Thu, 14 Sept 2023 06:35:10 AM

உழுவா கஞ்சி செய்வது எப்படின்னு தெரியுங்களா!

சென்னை: நம் பாரம்பரியமிக்க உழுவா கஞ்சி செய்வது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: சாப்பாட்டு அரிசி – 1 கப், பூண்டு சிறியது – 1,(பெரியதாக இருந்தால் – 12), வெந்தயம் – 2 தே.கரண்டி, கருப்பட்டி – 1 வட்டு, தேங்காய் பால் – ஒன்றிலிருந்து ஒன்றரை கப், சீனி – தேவைப்பட்டால், (முட்டை விரும்புபவர்கள் 1 முட்டை சேர்க்கலாம்)

delicious,uruwa porridge,blackcurrant,coconut milk ,அருமையான, உழுவா கஞ்சி, கருப்பட்டி, தேங்காய் பால்

செய்முறை: முதலில் அரிசியுடன் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற கணக்கில் குக்கரிலோ அல்லது சட்டியிலோ நன்கு குழைய வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்.

அடுத்து மற்றொரு சட்டியில் 1 வட்டு கருப்பட்டிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து காய்த்து வடிக்கட்டி எடுத்து வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி அதில் மசித்து வைத்திருக்கும் சாதம் மற்றும் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை சிம்மிலே வைக்கவும்

தேங்காய் பால் நன்கு கொதித்ததும் வடிக்கட்டி எடுத்து வைத்துள்ள கரைத்த கருப்பட்டி தண்ணீரை இதனுடன் சேர்க்கவும. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர், இனிப்பு சேர்த்து கொள்ளலாம் முட்டை சேர்க்க விரும்புபவர்கள் ஒரே ஒரு முட்டையை சேர்த்து கொள்ளலாம்.

முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும் இல்லையெனில் முட்டை பொடிது பொடிதாக கஞ்சில் மிதந்து விடும் எனவே, சற்று கவனமாக சேர்க்கவும். அடுப்பிலே வைத்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். அருமையான உழுவா கஞ்சி ரெடி.

Tags :