Advertisement

ஆரோக்கியத்தை அருமையாக கொடுக்கணுமா... அப்போ பனங்கிழங்கு பர்பி செய்வோம்

By: Nagaraj Sun, 29 Jan 2023 11:06:27 PM

ஆரோக்கியத்தை அருமையாக கொடுக்கணுமா... அப்போ பனங்கிழங்கு பர்பி செய்வோம்

சென்னை: பனங்கிழங்கில் சத்து நிறைந்த பர்ஃபி செய்வோம் வாங்க. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
வேகவைத்த பனங்கிழங்கு- 6தண்ணீர் -1/4 கப்பனை வெல்லம் -1 கப்ஏலக்காய் - 2நெய் -2 டேபிள் ஸ்பூன்துருவிய பாதாம்,பிஸ்தா, கடலை - 1 டேபிள் ஸ்பூன்.

almonds,pistachios,peanuts,burpees,plantains,jaggery ,பாதாம்,பிஸ்தா, கடலை, பர்பி, பனங்கிழங்கு, வெல்லம்

செய்முறை: ஒரு தட்டில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி நன்றாக தடவி வைக்கவும். குறைவான நீரில் பனங்கிழங்கின் வெளிப் பக்கத்தில் உள்ள நார்களை நீக்கி வேக வைத்துக்கொள்ளவும்.

பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிமிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும். தனியாக வாணலியில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் 10 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு பனைவெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பனங்கிழங்குத் துருவல் வெல்லத்துடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும். இறுதியாக மீதமுள்ள நெய்யைச் சேர்த்து மேலும் ஒரு சில நிமிடம் நன்கு கிளற வேண்டும். பின்பு நெய் தடவிய தட்டில் பர்ஃபியை கொட்டி வெட்டவும். துருவிய பாதாம், பிஸ்தா, தெளித்தால் பர்ஃபி சுவையாக இருக்கும்.

Tags :