Advertisement

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் 7 வகை தானியங்களை சேர்த்து தோசை செய்யும் முறை

By: Nagaraj Wed, 03 June 2020 2:46:44 PM

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் 7 வகை தானியங்களை சேர்த்து தோசை செய்யும் முறை

நம் உடல் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம்
கொள்ளு - 50 கிராம்
கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
கருப்பு உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

whole grain,health,ragi,rye,wheat,wheat ,தானிய தோசை, ஆரோக்கியம், ராகி, கம்பு, கோதுமை, வரகு


செய்முறை: கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சத்தான தானிய தோசை ரெடி.

Tags :
|
|
|
|