Advertisement

அருமையான முறையில் துவரம்பருப்பு சாம்பார் செய்முறை

By: Nagaraj Fri, 22 July 2022 4:05:29 PM

அருமையான முறையில் துவரம்பருப்பு சாம்பார் செய்முறை

சென்னை: சைவ சமையலில் சாம்பாருக்கு முக்கிய இடம் உண்டு. சாம்பார் என்றாலே நம் நினைவுக்கு வருவது பருப்புதான். சாம்பாரின் பிரதானமே துவரம் பருப்புதான். இது உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு புரதசத்து, விட்டமின் சி, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவரீதியான பலன்கள் உண்டு.

தேவையான பொருள்கள்
150 கிராம் துவரம் பருப்பு2 பெரிய வெங்காயம்3 தக்காளி8 பல் பூண்டு2 பச்சை மிளகாய்2 காய்ந்த மிளகாய்1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்1/2 மேசைக்கரண்டி கடுகு1 மேசைக்கரண்டி சீரகம்1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு1 மேசைக்கரண்டி பெருங்காயதூள்தேவையான அளவு உப்புதேவையான அளவு எண்ணெய்சிறிதளவு கருவேப்பிலை

dry chillies,fenugreek powder,caraway leaves,cumin,sambar,dal ,காய்ந்த மிளகாய்,பெருங்காய தூள், கருவேப்பிலை, சீரகம், சாம்பார், துவரம் பருப்பு

செய்முறை:முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 இலிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)

அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்துமூடி வேக விடவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளலாம்.)

பின் உளுத்தம்பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் சீரகம், காய்ந்த மிளகாய்,பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும். அருமையான ருசியில் சாம்பார் ரெடி.

Tags :
|
|