Advertisement

  • வீடு
  • சமையல் குறிப்புகள்
  • ஈஸியாக செய்யலாம் எனர்ஜி ட்ரிங்க் நட்ஸ் மில்க் ஷேக்; அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்

ஈஸியாக செய்யலாம் எனர்ஜி ட்ரிங்க் நட்ஸ் மில்க் ஷேக்; அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்

By: Nagaraj Sat, 18 Feb 2023 12:09:12 PM

ஈஸியாக செய்யலாம் எனர்ஜி ட்ரிங்க் நட்ஸ் மில்க் ஷேக்; அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்

சென்னை: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க ஈஸி எனர்ஜி ட்ரிங்க் நட்ஸ் மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இன்றைய குழந்தைகள் புராஜெக்ட்டுகள், தினசரி வீட்டுப்பாடங்கள், பாடத் திட்டம் தாண்டியும் கற்க வேண்டிய இதர பயிற்சிகள், ஃபைன் ஆர்ட்ஸ் வகுப்புகள் என இரவிலும் தாமதமாகத் தான் தூங்கச் செல்கிறார்கள். சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது பல நேரங்களில் முடியாமல் ஆகி விடுகிறது. இதில் இருந்து தப்பிக்க இந்த நட் மில்க் ஷேக் உங்களுக்கு உதவும்.

சத்துக்கள் மிகுந்த உலர் பழங்கள் மற்றும் விதைகளை அரைத்து அவற்றுடன் பால் கலந்து தயாரிக்கும் இந்த நட்ஸ் மில்க் ஷேக் அதிகமாக உண்பதைத் தடுப்பதுடன் அனீமிக்காக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான சரிவிகித டயட்டையும் ஈடு செய்கிறது.

தேவையான பொருட்கள்:
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்காய்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்பேரீட்சை- 1 டேபிள் ஸ்பூன்பால் – 2 கப்தண்ணீர்- தேவையான அளவுசர்க்கரை அல்லது தேன் – விரும்பினால் சேர்க்கலாம்

milkshake,almonds,cashews,almonds,pistachios,raisins ,மில்க் ஷேக், பாதாம் பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை

செய்முறை: தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அவற்றை ஒருமுறை சுத்தமான நீரில் கழுவி விட்டு முதல் நாள் இரவே அவை மூழ்கும் அளவுக்கான தண்ணீரில் ஊற வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அளவாகத் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும்.

பால் வெது வெதுப்பான சூட்டுக்கு வந்ததும் அதில் கால் டம்ளர் அளவு பாலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்திருந்த உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கலந்த கலவையில் தண்ணீரை வடிகட்டி தோல் நீக்கி கால் டம்ளர் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளலாம். முதலில் குறைந்த அளவு பாலில் அரைப்பது என்றால் அப்போது தான் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் நன்கு அரைபடும். திப்பித் திப்பியாக அவை சரியாக அரைபடாமல் தடுக்க இப்படி முதலில் ஸ்மூத்தி செய்து எடுத்துக் கொண்டு கடைசியாக மீதமுள்ள பாலையும் கலந்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக இரண்டு முறை அடித்து இறக்கினால் போதும் நன்கு சத்தான நட்ஸ் மில்க் ஷேக் தயார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் இரண்டு கப் நட்ஸ் மில்க் ஷேக் கிடைக்கும். குழந்தைகள் மட்டுமல்ல இந்த மில்க் ஷேக் பெரியவர்கள் முதல் அனைவரும் அருந்தலாம்.

Tags :