Advertisement

அட்டகாசமான முட்டை பிரியாணி செய்வது எப்படி?

By: Monisha Wed, 22 July 2020 6:06:51 PM

அட்டகாசமான முட்டை பிரியாணி செய்வது எப்படி?

முட்டை பிரியாணி செய்வது மிகவும் சுலபம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
முட்டை - 5
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - 1 கப்
எலுமிச்சம்பழம் - 1
நெய் எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவைக்கு

egg biryani,onion,tomato,ginger,garlic ,முட்டை பிரியாணி,வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு

செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விடவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்த பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து வேக வைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சூப்பரான முட்டை பிரியாணி தயார்.

Tags :
|
|
|