Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டை சப்பாத்தி செய்முறை

By: Nagaraj Thu, 17 Sept 2020 09:48:36 AM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் முட்டை சப்பாத்தி செய்முறை

சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதை இன்னும் விரும்பி சாப்பிடும் வகையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்து பாருங்கள். சும்மா... சும்மா... அம்மா தாம்மா என்று சுற்றி வருவார்கள்.

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி - 5
முட்டை - 4
கடலை மாவு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பெ.வெங்காயம் - 3
சீரகம் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

eggs,chapati,green chillies,onions ,முட்டை, சப்பாத்தி, பச்சை மிளகாய், வெங்காயம்

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். ருசியான முட்டை சப்பாத்தி ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|