Advertisement

முட்டை மலாய் குருமா செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 24 Nov 2022 3:35:59 PM

முட்டை மலாய் குருமா செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: வீடே கமகமக்கும் அளவில் முட்டை மலாய் குருமா செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. செய்வோமா வாங்க.

தேவையான பொருட்கள்
முட்டை – 6 (வேக வைத்தது)
எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5-6
வெங்காயம் – 2 (நறுக்கியது)
கொத்தமல்லி – 1/4 கப்
புதினா – 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – 6-8 (வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்)
பால்/சுடுநீர் – 1/2 – 3/4 கப்
கரம் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
ஹெவி க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
வெண்ணெய் – 1 டீஸ்பூன்

turmeric powder,jasmine powder,cumin powder,garam masala,malay kuruma ,
மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மலாய் குருமா

செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து அரைத்து, உடனே வாணலியில் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் அதில் சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து 7-10 நிமிடம் குறைவான தீயில் எண்ணெய் சற்று பிரியும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, தயிரை ஊற்றி குறைவான தீயில் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி விடவேண்டும்.

பின் அதில் முந்திரி பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பால்/நீரை ஊற்றி கிளறி, 1-2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் கரம் மசாலா பவுடர், மிளகுத் தூள், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் வேக வைத்த முட்டைகளை சேர்த்து மெதுவாக கிளறி, 1-2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து, இறுதியில் ஹெவி க்ரீம், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வெண்ணெய் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், ஹைதராபாத் முட்டை மலாய் குருமா தயார்.

Tags :