- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- அருமையான மசாலாவுடன் கூடிய முட்டை தொக்கு செய்முறை
அருமையான மசாலாவுடன் கூடிய முட்டை தொக்கு செய்முறை
By: Nagaraj Mon, 06 July 2020 2:10:44 PM
முட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. அதில் பலவித வெரைட்டி செய்வார்கள். முட்டையில் தொக்கு செய்யும் விதம் பற்றி இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை
வேக வைத்த முட்டை – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
கரம் மசாலாபொடி – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு+எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்
கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேகவைத்து
ஓட்டை உடைத்து 2 ஆக வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு,
கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது வதக்கிய பின் தக்காளியை போட்டு நன்கு மசிய வதக்கவும்.
தக்காளி
நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு நன்கு
வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி வரும் போது
முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி விட்டு அடுப்பை மிதமான தீயில்
வைக்கவும்.
மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிவும் போது கொத்தமல்லிதழை தூவி இறக்கவும். சுவையான முட்டை தொக்கு தயார்.