Advertisement

ருசியாக கத்திரிக்காய் வருவலை இப்படி செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Fri, 15 Sept 2023 10:23:49 AM

ருசியாக கத்திரிக்காய் வருவலை இப்படி செய்து பாருங்கள்!!!

சென்னை: ருசியான கத்திரிக்காய் வருவல் செய்யுங்கள். சாம்பார் சாதத்திற்கு மிகவம் அருமையான சைட் டிஷ்.

தேவையான பொருள்கள் கத்தரிக்காய் – 10, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடி செய்ய: தனியா – 2 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு

eggplant,oil,masala,fry,turmeric powder ,கத்திரிக்காய், எண்ணெய், மசாலா, வறுவல், மஞ்சள்தூள்

செய்முறை: கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து சற்று கொரகொப்பாக பொடித்து கொள்ளவும்.

கத்தரிக்காயை வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெயை ஊற்றவும். தோசை கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காய் துண்டுகளை பொடித்து வைத்த மசாலாவில் பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்கவும். இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து சூடாக பரிமாறவும். இது சாம்பார் ரசத்திற்கு ஏற்ற சைட் டிஷ்.

Tags :
|
|
|