Advertisement

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்முறை

By: Nagaraj Tue, 23 Aug 2022 11:38:36 AM

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்முறை

சென்னை: ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்து பார்த்து இருக்கிறீர்களா. செய்து பாருங்கள். அருமையான சுவையில் மயங்கி விடுவீர்கள்.

தேவையானவை

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சிக்கன் – 250 கிராம்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது
மசாலா பவுடருக்கு
வரமிளகாய் – 6-8
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
அரிசி – 1 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/2 கப்

spices,lemon juice,chicken,cumin,pepper,rice,aniseed ,மசாலா, எலுமிச்சை சாறு, சிக்கன், சீரகம், மிளகு, அரிசி, சோம்பு

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், சீரகம், மிளகு, அரிசி, சோம்பு மற்றும் மல்லி விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் சிக்கனை சேர்த்து உப்பு தூவி, சிக்கனானது தானாக நீர் விட்டு வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

நீர் முற்றிலும் வற்றியதும், அதில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் போது, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு தயார்.

Tags :
|
|
|
|