Advertisement

அடை மீந்து போனாலும் சூப்பராக உப்புமா செய்யலாம்

By: Nagaraj Sat, 17 Sept 2022 11:25:32 PM

அடை மீந்து போனாலும் சூப்பராக உப்புமா செய்யலாம்

சென்னை: சூப்பரான டிபன் அடை உப்புமா செய்து பாருங்கள். காலையில் செய்த அடை மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. மீந்து போன அடையை வைத்து சூப்பரான உப்புமா செய்யலாம்.

தேவையான பொருட்கள் : அடை - 3 வெங்காயம் - 1 எண்ணெய் - தேவையான அளவு கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் புளி கரைச்சல் - ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவைகேற்ப

onion,chili powder,tamarind paste,salt,chapati ,வெங்காயம், மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு, சப்பாத்தி

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடையை நன்றாக உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை சேர்த்து தாளிக்கவும். பிறகு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை உதிரியாக வந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும். சூப்பரான அடை உப்புமா ரெடி.

Tags :
|
|