Advertisement

மாலை நேரத்துக்கான சுவையான டிபன்!!

By: Monisha Tue, 28 July 2020 6:11:23 PM

மாலை நேரத்துக்கான சுவையான டிபன்!!

மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக சுவையாக செய்து கொடுக்க விரும்பினால் சேமியா, முட்டை சேர்த்து சுவையான இந்த டிபனை செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்
சேமியா - 1 கப்
நெய் - தேவையான அளவு
முட்டை - 3
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவைகேற்ப
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

evening,breakfast,vermicelli,egg,onion ,மாலை,டிபன்,சேமியா,முட்டை,வெங்காயம்

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளலாம். அதே கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு , சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளலாம்.

கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். உங்களுக்கு தேவையானால் கேரட்,பீன்ஸ், பச்சைப்பட்டாணி போன்றவை சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 250 மி.லி வீதம் தண்ணீர் சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும். சேமியா நன்றாக வெந்ததும் இதனுடன் பொரித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்துக் கிளறி கொஞ்சம் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கவும். சூப்பரான சேமியா முட்டை உப்புமா ரெடி.

Tags :
|