Advertisement

பிரமாதம்... அருமை என்று சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் லெமன் சிக்கன் ரெசிபி

By: Nagaraj Wed, 26 Aug 2020 08:09:45 AM

பிரமாதம்... அருமை என்று சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் லெமன் சிக்கன் ரெசிபி

சிக்கன் பிடிக்காத அசைவப் பிரியர்கள் என யாராவது இருப்பார்களா? சிக்கனை விரும்பி சாப்பிடுபவர்களுக்காக ஒரு புதுவித ரெசிபியைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். சூடான சுவையான லெமன் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


சிக்கன் இறைச்சி - 4 மார்பு துண்டங்கள்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
கார்ன்ஃப்ளவர் - 6 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
பச்சை குடை மிளகாய் - 1
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
ஜாதிக்காய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

lemon chicken,cornflower,oil,chives ,லெமன் சிக்கன், கார்ன் ஃப்ளவர், எண்ணெய், குடைமிளகாய்

செய்முறை: கோழி கறியில் உள்ள எலும்புகளை நீக்கி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பினை கோழி கறியின் மீது ஊற்றி ஊறவிடவும்.
அடுத்து 2 ஸ்பூன் கார்ன்ப்ளவரை நீரில் கரைத்துக் கொள்ளவும்.
குடை மிளகாயினை நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சைத் தோலினை துருவிக் கொள்ளவும்.

சிக்கனை கார்ன்ஃப்ளவரில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், குடை மிளகாய், வெள்ளை மிளகுத் தூள், உப்பு, ஜாதிக்காய், எலுமிச்சைத் தோல், சிக்கன் ஸ்டாக் போன்றவற்றினைப் போட்டு வேகவிடவும்.

இதில் கார்ன்ஃப்ளவரை ஊற்றிக் கலந்து வேகவிட்டு இறக்கி, சிக்கனைப் போட்டு மீண்டும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி இறக்கினால் லெமன் சிக்கன் ரெடி. சூப்பர் சுவை என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|