Advertisement

அருமையான ருசியில் நண்டு கிரேவி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Tue, 15 Sept 2020 9:25:39 PM

அருமையான ருசியில் நண்டு கிரேவி செய்முறை உங்களுக்காக!!!

நண்டில் குழம்பு, இரசம் என்பது போன்ற வகைகளையே செய்து சாப்பிடுவோம். நண்டில் ரொம்பவும் டேஸ்ட்டியான மொறுமொறுப்பான நண்டு கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நண்டு - அரை கிலோ
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
சர்க்கரை - 1 ஸ்பூன்
சோளமாவு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
முட்டை – 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

crab gravy,tomato paste,vinegar,corn ,நண்டு கிரேவி, தக்காளி விழுது, வினிகர், சோளமாவு

செய்முறை: கொத்தமல்லி, பூண்டை நறுக்கி, தக்காளியை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து தாளித்து, நண்டு, தண்ணீர் சேர்த்து லேசாக வேகவிடவும்.

அடுத்து அதனுடன் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், உப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து சோளமாவுடன் தண்ணீர் கலந்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதையும் குழம்பில் சேர்த்து கொத்தமல்லித் தழையைத் தூவவும். இப்போது டேஸ்ட்டியான நண்டு கிரேவி ரெடி.

Tags :