Advertisement

அருமையான சுவையில் வெந்தயக்கீரை காரக் குழம்பு செய்முறை

By: Nagaraj Mon, 02 Nov 2020 9:33:42 PM

அருமையான சுவையில் வெந்தயக்கீரை காரக் குழம்பு செய்முறை

சமையலில் வெந்தயக்கீரை காரக் குழம்பு என்பது புது வகையான ருசி மட்டுமல்ல, குடும்பத்தினருக்கு நலம் சேர்க்கும். இதை எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையானவை:

வெந்தயக்கீரை-1/2 கப்,
சின்ன வெங்காயம் 20,
பூண்டு-10 பல்,
புளி- தேவையானஅளவு,
சாம்பார்தூள் 2 தேக்கரண்டி,
சிவப்பு மிளகாய்தூள்-1தேக்கரண்டி,
மல்லிதூள்-1தேக்கரண்டி,
மஞ்சள்தூள்-1/4தேக்கரண்டி,
பெருஞ்சீரக தூள்-1/2 தேக்கரண்டி,
உப்பு-தேவையானஅளவு,
நல்லெண்ணெய்-1தேக்கரண்டி,
கடுகு-1/4 தேக்கரண்டி,
வெல்லம்-சிறிய துண்டு.

fenugreek,sambar powder,chili powder,coriander powder,taste ,வெந்தயக்கீரை, சாம்பார்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், ருசி

செய்முறை: வெந்தயக்கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, பூண்டு மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.

பின் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கி புளிகரைசல் சேர்த்து அதனுடன் சாம்பார்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், பெருஞ்சீரகம்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். இப்போது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும். அருமையான ருசி மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.

Tags :