Advertisement

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

By: Nagaraj Tue, 18 Aug 2020 09:30:47 AM

அருமையான சுவையில் முருங்கைக்காய் மிளகு குழம்பு செய்முறை

முருங்கையின் மகத்துவம் அனைவரும் அறிந்ததே. இதனுடன் பலவகை நன்மை தரும் மிளகை சேர்ந்தால் விளையும் பயன்கள் ஏராளம். எனவே முருங்கைக்காயுடன் மிளகு சேர்த்து குழம்பு வைத்து குடும்பத்தினரின் நலம் காப்போம்.

தேவையானவை:
முருங்கைக்காய் – 2
புளி – எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
பெருங்காயம் – சிறு துண்டு
மிளகு – 2 டீஸ்பூன்
தனியா – ஒரு டீஸ்பூன்
வெல்லம் – சிறு துண்டு
கடுகு, மஞ்சள் பொடி – தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

drumstick,pepper,tamarind,apricot,jaggery ,முருங்கைக்காய், மிளகு, புளி, பெருங்காயம், வெல்லம்

செய்முறை: முருங்கைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல நறுக்கிக்கொண்டு, புளியைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனியா, பெருங்காயம், தலா அரை டீஸ்பூன் உளுந்து, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்க வேண்டும்.

அவை ஆறியதும் தண்ணீர் விடாமல் பொடித்துக் கொண்டு பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். வாணலியில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, மீதமிருக்கும் பருப்பு வகைகள், ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள், முருங்கைக்காய், புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

முருங்கைக்காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி, ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம். மிளகுக் குழம்பில் முருங்கைக்காய் சேர்ப்பதால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். வேண்டுமானால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம். இந்த குழம்பு குடும்பத்தினர் அனைவரின் வரவேற்பையும் பெறும்.

Tags :
|