Advertisement

அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் செய்முறை

By: Nagaraj Wed, 30 Sept 2020 11:51:38 AM

அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் செய்முறை

சில குழந்தைகளுக்கு கத்திரிக்காய் என்றாலே அலர்ஜி. ஆனால் அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அடங்கி உள்ளது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

அரிசி - கால் கிலோ,
பிஞ்சுக் கத்திரிக்காய் - 6,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

rice,pinch eggplant,onion,mustard ,அரிசி, பிஞ்சுக் கத்திரிக்காய், வெங்காயம், கடுகு

செய்முறை: குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம். அருமையான ருசி என்று மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள்.

Tags :
|
|